Wednesday, November 4, 2009

பிரபாகரன் வாழ்வும் மரணமும் - புத்தக விமர்சனம்


எப்போதுமே ஒருவருடைய வாழ்க்கை வரலாறுகள் படிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை , பெரிதும் நாவல்கள் ,சிறுகதைகள் மட்டுமே விரும்பி படிபேன் .ஆனால் நேற்று மதியம் NHM முலம் எனக்கு பிரபாகரன் வாழ்வும் மரணமும் புத்தகம் கிடைத்தது . முதலில் பெரிதாக விருப்பம் இல்லாமல் ஆரம்பித்தேன்.சொன்னால் நம்பமாட்டிர்கள் , நான்கு மணி நேரத்தில் புத்தகத்தை கிழே வைக்காமல் படித்து முடித்தேன். அதன்னை சுவாரசியம் ,துல்லியமான தகவல்கள். அதில் சிலவற்றை குறுப்பிட விரும்புகிறேன் .

இந்த புத்தகம் ஒரு பிரபல பத்திரிகையில் தொடராக வந்தது.ஆசிரியர் பா. ராகவன் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையோடு நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார் .பிரபாகரனின் வாழ்கையை 26 தலைப்புகளோடு பிரித்துள்ளார். இதுவே புத்தகத்தை படிக்க தூண்டுகிறது .

எப்போதும் குழந்தை பருவத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது இந்த புத்தகம் . ஒரு அருமையான திரைப்படத்திற்கான ஆரம்பம் போல் உள்ளே இழுத்து செல்கிறது .தனது 21 ஆம் வயதில் துரைஅப்பாவை கொலை செய்வதில் ஆரம்பம் ஆகிறது புத்தகம், அடுத்து அடுத்து என்று புத்தகம் வேகம் எடுத்து செல்கிறது . கொலை செய்துவிட்டு 769 பஸ் பிடித்து யாழ்பாணம் சென்றது வரை ஆசிரியர் துள்ளியமாக விவரிக்கிறார் .அங்கே இருந்து நாமும் தலைவர் பிரபாகரனுடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் .


வேறு தலைமுறை என்கிற தலைப்பில் அவரது இளம்வயது பருவத்தை சுருக்கமாக நறுகென்று சொல்கிறார் .தலைவரின் சிறு வயது நடப்புகள் பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்காது .ஆதலால் அந்த பகுதி ஆச்சிர்யம் நிறைந்ததாக இருந்தது. தலைவர்க்கு முன்பு யாரெல்லாம் அறவழியில் போராட்டம் செய்தார்கள் என்பதையும் அங்கங்கே விளக்கி செல்கிறார் ஆசிரியர் .
குறிப்பாக தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.பி. அவர்கள் செய்த போராட்டங்கள் மக்களிடம் அவருக்கு மதிப்பு இவற்றை பதித்திருக்கிறார் .

தலைவரின் ஏலம் வயதில் தான் பல்கலைகழகங்களில் தமிழ் மாணவர்கள் புறகணிக்க பட்டார்கள் .வரலாற்றில் பதியாத சில செய்திகளை ஆசிரியார் எழுதியுள்ளார் குறிப்பாக 1972 ஆண்டு முதன் முதலாக ஒரு இரவு நேரத்தில் தலைவரை தேடி போலீஸ் அவர் வீட்டிற்க்கு வருவதையும் அப்போது அவர் அங்கு இருந்து தப்பிப்பது .அதன் பிறகு அவர் கடைசிவரை தனது வீட்டிற்கு
செல்லாததையும் குறிப்பிட்டுஇருகிறார் ஆசிரியர் .

முதன்முதலில் ஒரு குழுவில் இளம் உறுபினராக சேர்ந்த தலைவர் மெக்கநிக்கின்
உதவியாளராக பணியாற்றினார் . அப்போதுதான் துப்பாக்கிகளை எப்படி ரிப்பேர் செய்வது போன்றவற்றை கற்றுகொண்டர் .அங்கே தான் தலைவருக்கும் ஆயுதங்களுக்குமான தொடர்பு ஆரம்பித்தது என்பதை ஆசிரியார் ஆதரங்களோடு குறிபிடுகிறார் .

சில இடங்களில் வசனங்கள் நம்மை கவர தவறுவதில்லை .அவை உண்மையாக அவ்விடங்களில் இடம் பெற்றவையா என்பது குறுப்பிடபடவில்லை.வீட்டைவிட்டு வெளிஎரிய பின்பு அவரி பார்க்க தலைவரின் தந்தை வேலு பிள்ளை வந்து என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்று கேட்ப்பார் ,அதற்கு தலைவர், "அப்பா உங்களுக்கு முழுக்க புரியும்மா என்று தெரியவில்லை .என்னால் உங்களுக்கு இனி பயனில்லை.என்னை விட்டுவிடுங்கள் "

முதன்முதலில் தலைவர் தனது இயக்கத்துக்கு 'புதிய தமிழ் புலிகள்' என்றுதான் பெயர் சூட்டியுள்ளார் .அப்போது இயக்கம் வெளியில் தெரியாத நேரம் .1976 மே 5 ஆம் தேதி தான் தலைவர் தமிழீழ விடுதலை புலிகள் என்ற பெயரை வைத்தார்.இப்படியாக இயக்கத்தின் வளர்ச்சியை ஆசிரியர் நுணுக்கமாக விவரிக்கிறார் .

பூந்தோட்டக் காவள்க்கைரன் என்கிற தலைப்பில் தலைவரும் அவரது இயக்கிதினரும் வவுனியா காடுகளில் பதுங்கி பயிற்சி மேற்கொண்டதை விவரிப்பதில் நம்மையும் வவுனியா காட்டுக்குள் அழைத்துசெல்கிறார் .தலைவர் எந்த வேற்று நாட்டு இயக்கங்களின் செயல்பாடுகளையும் பின்பற்றவில்லை என்பதை தெளிவாக குறுபிடுக்கிறார் ஆசிரியார் . உதரனத்திற்க்கு PLO என்கிற பாலஸ்தின விடுதலை இயக்கம் ஓன்று தானாக முன்வந்து புலிகளுக்கு பயிர் அளிக்க தயார் என்றது ,ஆனால் தலைவர் அதை மறுத்தார் ஏனென்றல் இலங்கைக்கு எது சரி என்று அவர்களுக்கு எப்படி தெரியும் என்பது அவரின் கூற்றாக இருந்ததை கூறுகிறார் .

தலைவருக்கும் ,உமாவுக்கும் சென்னையில் ஏற்ப்பட்ட துப்பாக்கி சண்டை பற்றி தெரியும் ஆனால் இந்தளவுக்கு விரிவாக இப்போதுதான் தெரிந்துகொண்டேன் . இருவருக்கும் நடுவில் எப்படி கலகம் ஏற்பட்டது என்பதிலிருந்து துள்ளியமாக கூறுகிறார் ஆசிரியார்.அப்போதுதான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் தலைவருக்கும் தொடர்ப்பு ஏற்பட்டது . தலைவரும் உமாவும் சென்னையில் கைதானவுடன் ஜெயவர்த்தனா நிமிர்ந்து உட்கார்ந்தார் , தமிழக முதல்வரை தொடர்ப்பு கொள்ள சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர் சிரித்தார் ,என்று ஆசிரியர் கூறுகிறார் .இந்த இடத்தில் நம்மையும் ஆசிரியர் நடந்தவற்றை நினைத்து சிரிக்க வைக்கிறார் .


550971231 என்கிற தலைப்பில் குமரன் பத்மநாதன் தலைவருடன் எப்படி இணைந்தார் என்பதையும் தெளிவாக சொல்கிறார் ஆசிரியர். நீர்வேலி கொள்ளை மூலம் இருவரும் நட்பானத்தை கொள்ளை சம்பவத்தோடு நமக்கு விவரிக்கிறார் ஆசிரியர் .கருப்பு ஜுலை ஜெயவர்த்தனா அரசு நடத்தியா காட்மிரண்டி தன்மான
செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவ துருப்புகளை அளிக்கும் காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.தலைவர் அடிக்கடி சொல்லும் வாசகமாக சிலவற்றை ஆசிரியர் கூறுகிறார் உதாரணத்திற்கு "போராளி குண்டுகளை வீனடிக்க கூடாது . ஒரு துப்பாக்கி ரவையின் விலை இருபத்தி ஐந்து ரூபாய் "

அதன்பிறகு அன்டன் பலசிங்கதுடனான நட்பை ,தலைவருக்கு மாணவி மதிவதனி மேல் ஏற்ப்பட்ட காதலையும் சுவைப்பட கூறியுள்ளார் ஆசிரியார் .இருவரின் திருமணத்தின் பொது இயக்கத்தினர் நடுவில் ஏற்பட்ட சலசலப்பை பாலசிங்கம் அனைவருக்கும் எடுத்து குறி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.தலைவரின் உருவத்தையும் அவரின் பழக்கங்களையும் ஆசிரியர் கூறும்போது நமக்குள் தலைவர் காட்சி தருகிறார் .அப்டி ஒரு விவரிப்பு .தலைவருக்கு தம்மால் ஆங்கிலம் சரளமாக பேசமுடியவில்லை என்கிற வருத்தம் இருந்ததாக ஆசிரியர் ஆதரங்களோடு குறுபிடுகிறார்.ஆனால் சமையலிலும் ,கணினி விசயத்தில் வல்லவர் தலைவர் என்பதயும் கூறுகிறார் .

அதன்பிறகு பொட்டுஅம்மான் ,மாத்தையா ,கருணா போன்றவர்களை பற்ற்யும் அவர்கள் எவ்வாறு தலைவருடன் இணைந்தார்கள் என்பதையும் தகுந்த ஆதாரத்தோடு சொல்கிறார் ஆசிரியார்.பிறகு ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட தொடர்பு அதனால் ஏற்பட்ட விளைவுகள் ,முரண்பாடுகள் ,அதன் பின் நடந்தேறிய தனி நபர் கொலைகளை ஆசிரியர் தெளிவாக கூறுகிறார்.தலைவர் ஒரு சர்வதிகாரி சிந்தனை உள்ளவர் என்பதை ஆசிரியர் ஆணித்தரமாக சொல்லிகிறார்.தலைவரின் இறங்கு முகம் 2006 போர் ஆரம்பம் ஆனதிலிருந்து தான் என்று ஆசிரியர் கூறுகிறார். போரின் கடைசி தருணங்களில் தலைவர் என்ன செய்தார் ,இந்தியா ராஜபக்சேவுக்கு என்ன செய்தது போன்றவற்றை துள்ளியமாக விவரிக்கிறார் . புத்தகத்தின் கடைசி பகுதிகளில் தலைவர் செய்த தவறுகளை ஆதாரங்களோடு சொல்கிறார். முடிவில் தலைவர் இறந்து விட்டார் என்பது ஆசிரியரின் வாதமாக உள்ளது. அதை சிலர் எற்க்கமருக்கலாம்.
ஆனால் ஆசிரியாரின் தெளிவான , துள்ளியமான நடையில் நம்மை ஆழ்ந்து படிக்கவும் ,சிந்திக்கவும் செய்கிறார் .சில அறிதர்க்குரிய புகைப்படங்களையும் தந்துள்ளனர் .வருங்கால சங்கதிகளுக்கு இது ஒரு அருமையான தமிழீழ மக்களின் வரலாற்று பதிவு .தலைவரும் தமிழீழமும் வேறு என்பதில் வேறு கருத்து இருக்குமா என்ன?

அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்
கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி
NHM க்கு நன்றி
ஆசிரியார் பா . ராகவன் அவர்களுக்கு நன்றி .

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

2 comments:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in