Tuesday, August 26, 2008

உலகின் ஜனாதிபதி


அன்று யாரும் எதிர்பாராத விதமாக லேசாக மழை பெய்தது.அந்த மழையில் நனனயாதவர்களே இல்லை.நானும் அந்த மழையில் என்னை நனைத்துக் கொண்டேன் . பெய்த மழை குறைவாக இருந்தாலும் மக்களுக்கும்,செடிக்கொடிகளுக்கும் அளவற்ற மகிழ்ச்சி . எல்லாம் ஓய்ந்தது.தலையில் இருந்த மழை துளிகளை உதறிக்கொண்டே ஒதுங்கினேன் .உரண்டு பிளவுட்டிருந்த நிலங்கள் நண்பர்கள் கை கோர்த்து சேர்வது போல் சேர்ந்தன.அன்றுதான் இந்த உலகின் ஜனாதிபதியை பார்த்தேன் .

அவர்
உலகை சுற்றி வருபவர்.அன்று எங்கள் தெருவுக்கு அவர் தரிசனம் தந்தார்.அன்று முதல் அவரை நான் தினமும் பார்க்க நேரிட்டது.ஏனென்றல் அவர் வீடு எங்கள் தெருவில் பஸ் ஸ்டாப்பாக இருந்தது. அதனால் நான் காலேஜ் செல்லும்போது பார்க்க நேரிடும்.அவர் செய்கைகளை பார்த்து ரசிப்பதில் எனக்கொரு சந்தோசம்.
அவர் போட்டிருந்த சட்டை சினிமா நடிகைகள் அணியும் உடைப்போல் குறைவாக இருந்தது.கீழே அணிதிருப்பது பாண்டா,டவுசரா என்று லியோநியை
வைத்து பட்டிமன்றம் வைக்கலாம். அவர் தலையை இரண்டு போர்சனாக பிரித்து குருவியும் ,காக்காவும் குடுத்தனம் நடத்திக்கொண்டிருந்தது .ஆஹா! அப்படி ஒரு ஹேர் ஸ்டைல் பார்த்ததேயில்லை.

நான்
காலையில் காலேஜ் போறப்பவும் ,திரும்பி வரும்போதும் அவரை தரிசனம் செஞ்சாகனும் அப்டி ஒரு மங்களகரமான ஆளு அவர்.அவர் முகம் சுத்திளால் நசுக்கிய சுதேசிப் பாத்தரம் போல இருந்தது.நெளிந்துபோன காங்கிரட் கம்பி போன்ற உடல்.சகதியை ரோஸ் பவுடர் போல் உடல் முழுவதும் பூசி இருந்தார்.ஏற்கனவே பதியாக தெரிந்துகொண்டிருந்த முகம் இப்பொது முழுவதும் மறைந்தது.அந்த பஸ் ஸ்டாப்க்கு குடிபெயர்ந்ததிலுருந்து யாரும் அந்த பக்கம் யாரும் திரும்புவதுகூட கிடையாது.எனேன்றால் அவர் ரஜினிகாந்த் போல எப்போ எந்த பொசிசனில் இருப்பார் என்று யாருக்கு தெரியும்.அவருக்கு அந்த பஸ் ஸ்டாப்லையே ஒன்றுக்கு,இரண்டுக்கு எல்லாம் போக ஆரமபித்துவிட்டார்.மூத்திரவாடை கொடலை புரட்டும். அவரு தங்குனது போதாதென்று தன் விருந்தாளிகளையும்,நண்பர்களையும் தங்கவச்சுப்பார்.யார்? யார் ? அந்த விருந்தாளிகள் என்று நினைக்கிறிர்கள்,மாடு,பன்றி,நாய்கள்தான்.பக்கத்திலே ஓடும் சாக்கடையை சுயெஸ் கால்வாய் போல பேப்பர் கப்பல் செய்து விடுவார்.

ஒரு நாள் நான் நைட் ஷோ முடிந்து வீடு திரும்பியபோது அந்த பஸ் ஸ்டாப் அருகே வந்துகொண்டிருந்தேன் ,திடிரென்று எனகொரு ஆர்வம் வந்தது,பகலில் அவர் என்ன செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும்,ஆனால் இரவில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது.அதை நான் கண்டுபிடிக்க மெதுவாக நடந்தேன்.என் கண்கள் எனை அறியாமல் விரிந்துகொண்டே இருந்தது. என்ன ஆச்சிரியம் .அந்த ஆள் தியானம் செய்வது போல் கண்ணைமுடி உட்கார்ந்திருந்தான்.அந்த ஆள் எனக்கு அன்றுமுதல் வித்தியாசமாக தோன்றினார்.
நான் ஒரு வாரம் விடுமுறையில் கலூரி சுற்றுலா சென்று வந்தேன்.அந்த பஸ் ஸ்டாப் இல் மக்கள் கூட்டம் அலை மோதியது. எனக்கு ஒரே ஆச்சிரியம்,யாரும் திரும்பிகூட பார்க்க இயலாத அந்த பஸ் ஸ்டாப் இல் இவ்வளவு கூட்டமா.வேகமாக அருகில் சென்று பார்த்தேன். மக்கள் பக்தியுடன் அவர் காலில் விழுந்து திருநீறு வாங்கி சென்றனர்.அவரை விரட்ட சொன்ன ராஜு தாத்தாவும் அவரை வணங்கி திருநீறு வாங்கி சென்றார்.
எதற்க்காக எல்லோரும் அவரை கும்புடுரிங்கனு கேட்டேன்.அவர் எழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராம் ,அவருடைய எட்டாவது அவதாரமாம் இது.காரில் வரும் பக்தர்களெல்லாம் கூட அவருக்கு உண்டு. தலையில் அடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று டிவி யில் செய்தியை பார்த்தால் தலைப்பு செய்தியில் நமது உலகின் ஜனாதிபதி.


எழுதிய வருடம் ௨00௨