Wednesday, November 4, 2009

பிரபாகரன் வாழ்வும் மரணமும் - புத்தக விமர்சனம்


எப்போதுமே ஒருவருடைய வாழ்க்கை வரலாறுகள் படிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை , பெரிதும் நாவல்கள் ,சிறுகதைகள் மட்டுமே விரும்பி படிபேன் .ஆனால் நேற்று மதியம் NHM முலம் எனக்கு பிரபாகரன் வாழ்வும் மரணமும் புத்தகம் கிடைத்தது . முதலில் பெரிதாக விருப்பம் இல்லாமல் ஆரம்பித்தேன்.சொன்னால் நம்பமாட்டிர்கள் , நான்கு மணி நேரத்தில் புத்தகத்தை கிழே வைக்காமல் படித்து முடித்தேன். அதன்னை சுவாரசியம் ,துல்லியமான தகவல்கள். அதில் சிலவற்றை குறுப்பிட விரும்புகிறேன் .

இந்த புத்தகம் ஒரு பிரபல பத்திரிகையில் தொடராக வந்தது.ஆசிரியர் பா. ராகவன் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையோடு நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார் .பிரபாகரனின் வாழ்கையை 26 தலைப்புகளோடு பிரித்துள்ளார். இதுவே புத்தகத்தை படிக்க தூண்டுகிறது .

எப்போதும் குழந்தை பருவத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது இந்த புத்தகம் . ஒரு அருமையான திரைப்படத்திற்கான ஆரம்பம் போல் உள்ளே இழுத்து செல்கிறது .தனது 21 ஆம் வயதில் துரைஅப்பாவை கொலை செய்வதில் ஆரம்பம் ஆகிறது புத்தகம், அடுத்து அடுத்து என்று புத்தகம் வேகம் எடுத்து செல்கிறது . கொலை செய்துவிட்டு 769 பஸ் பிடித்து யாழ்பாணம் சென்றது வரை ஆசிரியர் துள்ளியமாக விவரிக்கிறார் .அங்கே இருந்து நாமும் தலைவர் பிரபாகரனுடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் .


வேறு தலைமுறை என்கிற தலைப்பில் அவரது இளம்வயது பருவத்தை சுருக்கமாக நறுகென்று சொல்கிறார் .தலைவரின் சிறு வயது நடப்புகள் பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்காது .ஆதலால் அந்த பகுதி ஆச்சிர்யம் நிறைந்ததாக இருந்தது. தலைவர்க்கு முன்பு யாரெல்லாம் அறவழியில் போராட்டம் செய்தார்கள் என்பதையும் அங்கங்கே விளக்கி செல்கிறார் ஆசிரியர் .
குறிப்பாக தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.பி. அவர்கள் செய்த போராட்டங்கள் மக்களிடம் அவருக்கு மதிப்பு இவற்றை பதித்திருக்கிறார் .

தலைவரின் ஏலம் வயதில் தான் பல்கலைகழகங்களில் தமிழ் மாணவர்கள் புறகணிக்க பட்டார்கள் .வரலாற்றில் பதியாத சில செய்திகளை ஆசிரியார் எழுதியுள்ளார் குறிப்பாக 1972 ஆண்டு முதன் முதலாக ஒரு இரவு நேரத்தில் தலைவரை தேடி போலீஸ் அவர் வீட்டிற்க்கு வருவதையும் அப்போது அவர் அங்கு இருந்து தப்பிப்பது .அதன் பிறகு அவர் கடைசிவரை தனது வீட்டிற்கு
செல்லாததையும் குறிப்பிட்டுஇருகிறார் ஆசிரியர் .

முதன்முதலில் ஒரு குழுவில் இளம் உறுபினராக சேர்ந்த தலைவர் மெக்கநிக்கின்
உதவியாளராக பணியாற்றினார் . அப்போதுதான் துப்பாக்கிகளை எப்படி ரிப்பேர் செய்வது போன்றவற்றை கற்றுகொண்டர் .அங்கே தான் தலைவருக்கும் ஆயுதங்களுக்குமான தொடர்பு ஆரம்பித்தது என்பதை ஆசிரியார் ஆதரங்களோடு குறிபிடுகிறார் .

சில இடங்களில் வசனங்கள் நம்மை கவர தவறுவதில்லை .அவை உண்மையாக அவ்விடங்களில் இடம் பெற்றவையா என்பது குறுப்பிடபடவில்லை.வீட்டைவிட்டு வெளிஎரிய பின்பு அவரி பார்க்க தலைவரின் தந்தை வேலு பிள்ளை வந்து என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்று கேட்ப்பார் ,அதற்கு தலைவர், "அப்பா உங்களுக்கு முழுக்க புரியும்மா என்று தெரியவில்லை .என்னால் உங்களுக்கு இனி பயனில்லை.என்னை விட்டுவிடுங்கள் "

முதன்முதலில் தலைவர் தனது இயக்கத்துக்கு 'புதிய தமிழ் புலிகள்' என்றுதான் பெயர் சூட்டியுள்ளார் .அப்போது இயக்கம் வெளியில் தெரியாத நேரம் .1976 மே 5 ஆம் தேதி தான் தலைவர் தமிழீழ விடுதலை புலிகள் என்ற பெயரை வைத்தார்.இப்படியாக இயக்கத்தின் வளர்ச்சியை ஆசிரியர் நுணுக்கமாக விவரிக்கிறார் .

பூந்தோட்டக் காவள்க்கைரன் என்கிற தலைப்பில் தலைவரும் அவரது இயக்கிதினரும் வவுனியா காடுகளில் பதுங்கி பயிற்சி மேற்கொண்டதை விவரிப்பதில் நம்மையும் வவுனியா காட்டுக்குள் அழைத்துசெல்கிறார் .தலைவர் எந்த வேற்று நாட்டு இயக்கங்களின் செயல்பாடுகளையும் பின்பற்றவில்லை என்பதை தெளிவாக குறுபிடுக்கிறார் ஆசிரியார் . உதரனத்திற்க்கு PLO என்கிற பாலஸ்தின விடுதலை இயக்கம் ஓன்று தானாக முன்வந்து புலிகளுக்கு பயிர் அளிக்க தயார் என்றது ,ஆனால் தலைவர் அதை மறுத்தார் ஏனென்றல் இலங்கைக்கு எது சரி என்று அவர்களுக்கு எப்படி தெரியும் என்பது அவரின் கூற்றாக இருந்ததை கூறுகிறார் .

தலைவருக்கும் ,உமாவுக்கும் சென்னையில் ஏற்ப்பட்ட துப்பாக்கி சண்டை பற்றி தெரியும் ஆனால் இந்தளவுக்கு விரிவாக இப்போதுதான் தெரிந்துகொண்டேன் . இருவருக்கும் நடுவில் எப்படி கலகம் ஏற்பட்டது என்பதிலிருந்து துள்ளியமாக கூறுகிறார் ஆசிரியார்.அப்போதுதான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் தலைவருக்கும் தொடர்ப்பு ஏற்பட்டது . தலைவரும் உமாவும் சென்னையில் கைதானவுடன் ஜெயவர்த்தனா நிமிர்ந்து உட்கார்ந்தார் , தமிழக முதல்வரை தொடர்ப்பு கொள்ள சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர் சிரித்தார் ,என்று ஆசிரியர் கூறுகிறார் .இந்த இடத்தில் நம்மையும் ஆசிரியர் நடந்தவற்றை நினைத்து சிரிக்க வைக்கிறார் .


550971231 என்கிற தலைப்பில் குமரன் பத்மநாதன் தலைவருடன் எப்படி இணைந்தார் என்பதையும் தெளிவாக சொல்கிறார் ஆசிரியர். நீர்வேலி கொள்ளை மூலம் இருவரும் நட்பானத்தை கொள்ளை சம்பவத்தோடு நமக்கு விவரிக்கிறார் ஆசிரியர் .கருப்பு ஜுலை ஜெயவர்த்தனா அரசு நடத்தியா காட்மிரண்டி தன்மான
செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவ துருப்புகளை அளிக்கும் காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.தலைவர் அடிக்கடி சொல்லும் வாசகமாக சிலவற்றை ஆசிரியர் கூறுகிறார் உதாரணத்திற்கு "போராளி குண்டுகளை வீனடிக்க கூடாது . ஒரு துப்பாக்கி ரவையின் விலை இருபத்தி ஐந்து ரூபாய் "

அதன்பிறகு அன்டன் பலசிங்கதுடனான நட்பை ,தலைவருக்கு மாணவி மதிவதனி மேல் ஏற்ப்பட்ட காதலையும் சுவைப்பட கூறியுள்ளார் ஆசிரியார் .இருவரின் திருமணத்தின் பொது இயக்கத்தினர் நடுவில் ஏற்பட்ட சலசலப்பை பாலசிங்கம் அனைவருக்கும் எடுத்து குறி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.தலைவரின் உருவத்தையும் அவரின் பழக்கங்களையும் ஆசிரியர் கூறும்போது நமக்குள் தலைவர் காட்சி தருகிறார் .அப்டி ஒரு விவரிப்பு .தலைவருக்கு தம்மால் ஆங்கிலம் சரளமாக பேசமுடியவில்லை என்கிற வருத்தம் இருந்ததாக ஆசிரியர் ஆதரங்களோடு குறுபிடுகிறார்.ஆனால் சமையலிலும் ,கணினி விசயத்தில் வல்லவர் தலைவர் என்பதயும் கூறுகிறார் .

அதன்பிறகு பொட்டுஅம்மான் ,மாத்தையா ,கருணா போன்றவர்களை பற்ற்யும் அவர்கள் எவ்வாறு தலைவருடன் இணைந்தார்கள் என்பதையும் தகுந்த ஆதாரத்தோடு சொல்கிறார் ஆசிரியார்.பிறகு ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட தொடர்பு அதனால் ஏற்பட்ட விளைவுகள் ,முரண்பாடுகள் ,அதன் பின் நடந்தேறிய தனி நபர் கொலைகளை ஆசிரியர் தெளிவாக கூறுகிறார்.தலைவர் ஒரு சர்வதிகாரி சிந்தனை உள்ளவர் என்பதை ஆசிரியர் ஆணித்தரமாக சொல்லிகிறார்.தலைவரின் இறங்கு முகம் 2006 போர் ஆரம்பம் ஆனதிலிருந்து தான் என்று ஆசிரியர் கூறுகிறார். போரின் கடைசி தருணங்களில் தலைவர் என்ன செய்தார் ,இந்தியா ராஜபக்சேவுக்கு என்ன செய்தது போன்றவற்றை துள்ளியமாக விவரிக்கிறார் . புத்தகத்தின் கடைசி பகுதிகளில் தலைவர் செய்த தவறுகளை ஆதாரங்களோடு சொல்கிறார். முடிவில் தலைவர் இறந்து விட்டார் என்பது ஆசிரியரின் வாதமாக உள்ளது. அதை சிலர் எற்க்கமருக்கலாம்.
ஆனால் ஆசிரியாரின் தெளிவான , துள்ளியமான நடையில் நம்மை ஆழ்ந்து படிக்கவும் ,சிந்திக்கவும் செய்கிறார் .சில அறிதர்க்குரிய புகைப்படங்களையும் தந்துள்ளனர் .வருங்கால சங்கதிகளுக்கு இது ஒரு அருமையான தமிழீழ மக்களின் வரலாற்று பதிவு .தலைவரும் தமிழீழமும் வேறு என்பதில் வேறு கருத்து இருக்குமா என்ன?

அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்
கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி
NHM க்கு நன்றி
ஆசிரியார் பா . ராகவன் அவர்களுக்கு நன்றி .

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

Friday, August 14, 2009

வெக்கை குறும்படம் (இலங்கை அகதி)






வெக்கை - இலங்கை அகதியை பற்றிய ஒரு குறும்படம். இக்குறும்படம் ஒரு திரைப்படவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முதல் இடம் பிடிக்க வேண்டும் என்றால் இந்த படத்திற்கு அதிக மக்களின் ஒட்டு தேவை படுகிறது அதலால் இக்குறும்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து youtube rating மற்றும் comments பதிய வேண்டுகிறான் .

http://www.youtube.com/watch?v=0NSEpqoyD4k&feature=PlayList&p=FAB6591C0A3EB666&index=151

Wednesday, August 12, 2009

இஸ்மாயிலின் மூக்குகண்ணாடி - குறும்படம்






இஸ்மாயிலின் மூக்குகண்ணாடி குறும்படம்



இரு நண்பர்களை பற்றியது

http://www.youtube.com/watch?v=YJrbqCksZAc

உங்கள் கருத்தை பதியவும்

Tuesday, August 26, 2008

உலகின் ஜனாதிபதி


அன்று யாரும் எதிர்பாராத விதமாக லேசாக மழை பெய்தது.அந்த மழையில் நனனயாதவர்களே இல்லை.நானும் அந்த மழையில் என்னை நனைத்துக் கொண்டேன் . பெய்த மழை குறைவாக இருந்தாலும் மக்களுக்கும்,செடிக்கொடிகளுக்கும் அளவற்ற மகிழ்ச்சி . எல்லாம் ஓய்ந்தது.தலையில் இருந்த மழை துளிகளை உதறிக்கொண்டே ஒதுங்கினேன் .உரண்டு பிளவுட்டிருந்த நிலங்கள் நண்பர்கள் கை கோர்த்து சேர்வது போல் சேர்ந்தன.அன்றுதான் இந்த உலகின் ஜனாதிபதியை பார்த்தேன் .

அவர்
உலகை சுற்றி வருபவர்.அன்று எங்கள் தெருவுக்கு அவர் தரிசனம் தந்தார்.அன்று முதல் அவரை நான் தினமும் பார்க்க நேரிட்டது.ஏனென்றல் அவர் வீடு எங்கள் தெருவில் பஸ் ஸ்டாப்பாக இருந்தது. அதனால் நான் காலேஜ் செல்லும்போது பார்க்க நேரிடும்.அவர் செய்கைகளை பார்த்து ரசிப்பதில் எனக்கொரு சந்தோசம்.
அவர் போட்டிருந்த சட்டை சினிமா நடிகைகள் அணியும் உடைப்போல் குறைவாக இருந்தது.கீழே அணிதிருப்பது பாண்டா,டவுசரா என்று லியோநியை
வைத்து பட்டிமன்றம் வைக்கலாம். அவர் தலையை இரண்டு போர்சனாக பிரித்து குருவியும் ,காக்காவும் குடுத்தனம் நடத்திக்கொண்டிருந்தது .ஆஹா! அப்படி ஒரு ஹேர் ஸ்டைல் பார்த்ததேயில்லை.

நான்
காலையில் காலேஜ் போறப்பவும் ,திரும்பி வரும்போதும் அவரை தரிசனம் செஞ்சாகனும் அப்டி ஒரு மங்களகரமான ஆளு அவர்.அவர் முகம் சுத்திளால் நசுக்கிய சுதேசிப் பாத்தரம் போல இருந்தது.நெளிந்துபோன காங்கிரட் கம்பி போன்ற உடல்.சகதியை ரோஸ் பவுடர் போல் உடல் முழுவதும் பூசி இருந்தார்.ஏற்கனவே பதியாக தெரிந்துகொண்டிருந்த முகம் இப்பொது முழுவதும் மறைந்தது.அந்த பஸ் ஸ்டாப்க்கு குடிபெயர்ந்ததிலுருந்து யாரும் அந்த பக்கம் யாரும் திரும்புவதுகூட கிடையாது.எனேன்றால் அவர் ரஜினிகாந்த் போல எப்போ எந்த பொசிசனில் இருப்பார் என்று யாருக்கு தெரியும்.அவருக்கு அந்த பஸ் ஸ்டாப்லையே ஒன்றுக்கு,இரண்டுக்கு எல்லாம் போக ஆரமபித்துவிட்டார்.மூத்திரவாடை கொடலை புரட்டும். அவரு தங்குனது போதாதென்று தன் விருந்தாளிகளையும்,நண்பர்களையும் தங்கவச்சுப்பார்.யார்? யார் ? அந்த விருந்தாளிகள் என்று நினைக்கிறிர்கள்,மாடு,பன்றி,நாய்கள்தான்.பக்கத்திலே ஓடும் சாக்கடையை சுயெஸ் கால்வாய் போல பேப்பர் கப்பல் செய்து விடுவார்.

ஒரு நாள் நான் நைட் ஷோ முடிந்து வீடு திரும்பியபோது அந்த பஸ் ஸ்டாப் அருகே வந்துகொண்டிருந்தேன் ,திடிரென்று எனகொரு ஆர்வம் வந்தது,பகலில் அவர் என்ன செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும்,ஆனால் இரவில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது.அதை நான் கண்டுபிடிக்க மெதுவாக நடந்தேன்.என் கண்கள் எனை அறியாமல் விரிந்துகொண்டே இருந்தது. என்ன ஆச்சிரியம் .அந்த ஆள் தியானம் செய்வது போல் கண்ணைமுடி உட்கார்ந்திருந்தான்.அந்த ஆள் எனக்கு அன்றுமுதல் வித்தியாசமாக தோன்றினார்.
நான் ஒரு வாரம் விடுமுறையில் கலூரி சுற்றுலா சென்று வந்தேன்.அந்த பஸ் ஸ்டாப் இல் மக்கள் கூட்டம் அலை மோதியது. எனக்கு ஒரே ஆச்சிரியம்,யாரும் திரும்பிகூட பார்க்க இயலாத அந்த பஸ் ஸ்டாப் இல் இவ்வளவு கூட்டமா.வேகமாக அருகில் சென்று பார்த்தேன். மக்கள் பக்தியுடன் அவர் காலில் விழுந்து திருநீறு வாங்கி சென்றனர்.அவரை விரட்ட சொன்ன ராஜு தாத்தாவும் அவரை வணங்கி திருநீறு வாங்கி சென்றார்.
எதற்க்காக எல்லோரும் அவரை கும்புடுரிங்கனு கேட்டேன்.அவர் எழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராம் ,அவருடைய எட்டாவது அவதாரமாம் இது.காரில் வரும் பக்தர்களெல்லாம் கூட அவருக்கு உண்டு. தலையில் அடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று டிவி யில் செய்தியை பார்த்தால் தலைப்பு செய்தியில் நமது உலகின் ஜனாதிபதி.


எழுதிய வருடம் ௨00௨

Friday, July 25, 2008

கால்கள்


அன்று
ஒரு வேலை விசயமாக நான் சென்னை கிளம்பினேன், அதற்காக ரயில் ஏற சென்றேன் . கொல்கத்தா ரயில் சந்திப்பில் அன்று பலத்த கூட்டம் காணப்பட்டது , ஒவ்வொருவரும் தன் இரண்டு கைகளிலும் பெட்டிகளை பிடித்து கொண்டு வேகவேகமாக அந்த நெருக்கடியில் நடந்து சென்றார்கள் .சிலர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களுடன் பைப்பில் முட்டிமோதி கொண்டிருந்தார்கள் . அந்த நெருக்கடியில் ஒரு தமிழ் குரல் ஒலித்தது .
" அம்மா யாராவது கொஞ்சம் தருமம் பன்னுகளேன் ,கால் இல்லாத
நொண்டிம்மா"
நான் அந்த சத்தம் கேட்ட பக்கம் திரும்பி பார்த்தேன் . பல பீடி விளம்பர தாள்கள் ஒட்டிஇருந்த சுவரில் சாயுந்துஇருந்தன். அவனுடைய இரண்டு
ஊன்று கோலையும் பான் எச்சில் படிந்த சுவரில் சாய்த்து
வைத்துஇருந்தான்.அவனுக்கு இரண்டு கால்களும் முட்டிவரை துண்டிக்கபட்டுஇருந்தது . அதில் வெள்ளை துணி சுற்றிருந்தன் ,அந்த துணியை விட்டு ரத்தம் சிறிது வெளியே கசிந்துஇருந்தது . அதை பார்த்த எனக்கு அவ்வளவாக பரிதாபம் ஏற்படவில்லை ,இது போன்று சென்னையில் நிறைய உண்டு ,ஆனால் அதை பற்றி அவர்களிடம் விசாரிப்பதில் எனக்கு ஒருவித ஆர்வம் உண்டு. நான் என்னை அவனிடம் காட்டி கொள்ளவில்லை , என் என்றால்
அவன் தமிழன் என்னிடம் உதவி கேட்டால் ? நானே நாய்போல் ஊரூராக சுற்றி சம்பாதிக்க வேண்டும் இதில் நான் எங்கு அவனுக்கு உதவி செய்வது .இதல்லாம் நடக்குரகாரியமா ? இருந்தாலும் அவனை அந்த இடத்தில் விட்டுவர எனக்கு மனமில்லை .
அவனிடம்
பேச்சு கொடுக்கலாம் என்று வாயை திறந்தேன் ,அப்போது ஹிந்தியில் கண்ணியமான பெண்க்குரல் கேட்டது ரயில் இரண்டு மணிநேரம் தாமதமாம், உடனே ரூமுக்கு போய்விடலாம் என்று யோசித்தேன் ,பிறகு மெல்ல அவனருகே சென்றேன் அவன் என்னை உற்று கவனித்தான் .
உன்
பேரு என்னவேன்று மட்டும்தான் கேட்டேன் , அதற்கு அவன் ,

"அய்யா என்பேரு காசிலிங்கம், எதாவது உதவி பன்னுகய்யா ,இத்தனை நாளாய் இங்க ஒரு தமிழ் ஆளுக்குட வரலைய்யா ,நீங்களாவது எனக்கு எங்க
ஊருக்கு போக டிக்கெட் வாங்கிதாங்கய்யா " அவன் பேசிக்கொண்டே இருந்தான் ஆனால் பார்வையும் மனதும் அவன் காலை சுற்றி இருக்கும் ஈக்களை போலவே அவன் காலை சுற்றி வந்தன.அவன் எனமுகதின்முன் கை அசைத்துகாட்டி அவன் பக்கம் என் கவனத்தை திருப்பினான் .
"உங்களுக்கு எப்டி இந்த்கால் போச்சு " என்று கேட்டேன் .
எவ்வளவுதான் கடுபடுதினாலும் என் கண்கள் அவன் கால்களையே நோக்கின .
"அய்யா நான் மட்டும் இங்க வரலைய்யா என்னோட என் தம்பியும் வந்தான்"
எதற்க்காக இங்க வந்திங்க என்று நான் கேட்பதற்குள் ,
"நான் பொறந்ததே வெனய்யா வென ,எல்லாரும் வெளிநாட்டுக்கு பொய்
சம்பாதிகுராங்கனு நானும் என் தம்பியும் ஒரு ஏஜென்சி முலமா பணத்த கட்டுனோம் ,அவனும் எங்கள சென்னைக்கு கூட்டிவந்தான் .ஒரு ரயிலுல ஏத்திவிட்டு இதுல போய் கொல்கட்டால ஏறங்குக எங்களுங்க உங்கள சிங்கப்பூருக்கு அனுப்புங்கனு சொன்னான் .அத நம்பி ரயில்ல ஏறுனோம் .இங்க வந்து இறங்கினா ஒருத்தனையும் காணோம் ,அப்படியே பெட்டிபடுக்கயோட வெளியே வந்து நானும் என் தம்பியும் ஒரு ஆட்டோ புடிச்சோம் ,சென்னைல அந்தாளு கொடுத்த விலாசத்த வச்சு அந்த எடத்துக்கு போன அது பொய் விலாசம். வந்த ஆட்டோல திரும்பி ரயிலுக்கு போய்டலாம்னு போனா எங்க பின்னாடியே எமன் பல்ல காட்டிகிட்டு வந்துருக்கான் சாமி ,ஆட்டோ பஸ்ல மோதி என் தம்பி அந்த எடதுலையே இறந்துட்டான்யா ,அப்புறம் பர்தா ஒரு நாத்தம் புடிச்ச ஆசுபுதிரில கால் இல்லாம நான் கிடந்தேன் .என் தம்பி எங்கனு கேட்டேன் அதுக்கு அவங்க சொன்னதும் மொழி தெரியாம புரியலையா ,அப்பதான் என் தலையுல உரைச்சது ,சொந்த ஊர்ல ராஜா மாறி வாழ்றதாவுட்டு காசுக்கு ஆசைப்பட்டு வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ,அன்னைகிருந்து ஊருக்கு போக காசுஇல்லாம ஒரு வராம பிச்சை எடுத்து காசு சேத்துக்கிட்டு இருக்கன். நீங்கதான் எதாவது உதவி செய்யணும் அய்யா ,எங்க ஊர்ல நாங்க சிங்கபூர்ல இருக்காத நெனச்சிக்கிட்டு இருபாங்க , வாங்க முன்னாடி இப்டி கால் இல்லாம போய் நிக்க வெக்கமா இருக்கு ,ஆனா போகாம இருந்தா இங்க அனாத பொணமா கிடப்பன் சாமி .உங்கள பார்தப்ரம் தன் இப்ப நம்பிக்கைய இருக்கன் ,டிக்கெட் எடுத்துகுடுபிங்கலய்யா"

அப்போது மீண்டும் கண்ணியமான பெண் குரல் கேட்டது சென்னை ரயில்
இன்னும் சற்று நேரத்தில் புறபடபோவதாக, அதை கேட்டதும் என் மனச்சாட்சி என்னும் அறைலிருந்து சட்டென்று வெளியே குதித்தேன் .என் அப்பா ஆசுபுதிரியில் இருபது ஞாபகம் வந்தது ,அவன் தன் பொருள்களை மூட்டைகட்டும்போது அவனுக்கு தெரியாமல் ரயிலில் ஏறிவிட்டேன் .


--------------------